ADDED : செப் 01, 2026 07:32 PM
புதுச்சேரி: புதுச்சேரி வாலிபரிடம் 17.17 லட்சம் ரூபாய் மோசடி செய்த மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டை, இந்திரா நகரை சேர்ந்த 19 வயது வாலிபர் இன்ஸ்ட்ராகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, டெலிகிராம் குரூப் ஒன்றில் இணைந்தார். அவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பிய அவர், ஜிபே 17.17 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அந்த நபர் கொடுத்த பணியை செய்து, அதற்கான லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் சைபர் கிரைம் கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது.
அவர், கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
