/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 2 பேரிடம் ரூ.18 ஆயிரம் அபேஸ்
/
புதுச்சேரியில் 2 பேரிடம் ரூ.18 ஆயிரம் அபேஸ்
ADDED : ஏப் 22, 2025 04:40 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேரிடம் 18 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.
வில்லியனுாரை சேர்ந்தவர் பாபு. இவர் கடன் செயலி மூலம் கடன் வாங்கினார். அந்த கடனை வட்டியுடன் அடைத்துள்ளார். இவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து, பணம் கேட்டு மர்ம நபர் ஒருவர் மிரட்டினார். அதற்கு பயந்து 5 ஆயிரம் ரூபாயை பணம் அனுப்பி, மர்ம நபரிடம் அவர் ஏமாந்தார்.
மேலும், சொக்கநாதன்பேட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமல், இவரது அமேசான் கணக்கில் மூலம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 13 ஆயிரத்திற்கு பொருட்களை ஆர்டர் செய்து, மர்ம நபர் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, 2 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி செய்யும் நபர்களை தேடிவருகின்றனர்.