/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ.1.98 லட்சம் 'அபேஸ்'
/
5 பேரிடம் ரூ.1.98 லட்சம் 'அபேஸ்'
ADDED : மே 19, 2025 06:23 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1.98 ஆயிரம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆண் நபர், ஆன்லைனில் 73 ஆயிரத்து 800 ரூபாய்க்கு தனது தொழில் நிறுவன தேவைக்காக ரசாயன பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பல நாட்களாகியும், ஆர்டர் செய்த பொருள் வீட்டிற்கு வரவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்தது தெரியவந்தது.
தட்டாஞ்சாவடியை சேர்ந்த நபர் 36 ஆயிரம், கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் 10 ஆயிரத்து 400, கோரிமேட்டை சேர்ந்தவர் 53 ஆயிரம், முத்துபிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் 25 ஆயிரம் ரூபாய் என, 5 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 98 ஆயிரத்து 200 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.