/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கூட்டரில் இருந்து ரூ.2 லட்சம் திருட்டு
/
ஸ்கூட்டரில் இருந்து ரூ.2 லட்சம் திருட்டு
ADDED : மார் 20, 2025 04:38 AM
புதுச்சேரி: ஸ்கூட்டரில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 42; கவுண்டன்பாளையம் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி நடன ஆசிரியர். இவர் மாணவிகளுக்கு பரத நாட்டிய உடை தைப்பதற்காக கொம்பாக்கத்தில் உள்ள டைலர் ஒருவரிடம் ஆர்டர் கொடுத்து இருந்தார்.
நேற்று காலை சுந்தரமூர்த்தியும், அவரது மனைவி சஞ்நியாவும் வில்லியனுாரில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு, முதலில் வில்லியனுார் தேங்காய் சித்தர் மற்றும் ஒதியம்பட்டு வண்ணார பரதேசிக சுவாமிகள் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.
பின்னர், கொம்பாக்கம் சென்று, டைலரிடம் அட்வான்ஸ் பணத்தை கொடுக்க, ஸ்கூட்டரில் சீட்டை திறந்தபோது, அதில் வைத்திருந்த பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.