/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து ரூ.2.25 லட்சம் நகை, பணம் கொள்ளை
/
திருபுவனை அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து ரூ.2.25 லட்சம் நகை, பணம் கொள்ளை
திருபுவனை அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து ரூ.2.25 லட்சம் நகை, பணம் கொள்ளை
திருபுவனை அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து ரூ.2.25 லட்சம் நகை, பணம் கொள்ளை
ADDED : ஏப் 08, 2025 04:02 AM

திருபுவனை: திருபுவனை அருகே வீட்டில் பின்பக்க சுவற்றை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2.25 லட்சம் மதிப்புடைய நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் திரவுபதியம்மன் கோயில் எதிரே உள்ள கிழக்கு மணவெளி வீதியை சேர்ந்தவர் ஹரிராமன், இவரது மனைவி அருள்மொழி 41; ஹரிராமன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி அருள்மொழி திருபுவனையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை அருள்மொழி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட, மகனும், மகளும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். மாலை 4.45 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இன்பரசன் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அலங்கோளமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பணி முடிந்து அருள்மொழி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2.25 லட்சம் மதிப்புடைய 1 சவரன் தங்க செயின், 1 சரவன் குருமாத், முக்கால் சவரன் கம்மல் மற்றும் ரூ.5000 ரொக்கப் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் (பொறுப்பு) சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன், ஏட்டு மாயக்கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, அருகில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் இரும்பு ஷீட்டால் வேயப்பட்டுள்ள வீட்டின் பின் பக்கம் 8 அடி உயரத்திற்கு மேல் உள்ள சுவற்றை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

