/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
7 பேரிடம் ரூ. 2.79 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பலுக்கு வலை
/
7 பேரிடம் ரூ. 2.79 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பலுக்கு வலை
7 பேரிடம் ரூ. 2.79 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பலுக்கு வலை
7 பேரிடம் ரூ. 2.79 லட்சம் 'அபேஸ்'; மோசடி கும்பலுக்கு வலை
ADDED : ஏப் 12, 2025 07:19 AM
புதுச்சேரி; புதுச்சேரியில் 7 பேரிடம் 2.79 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பிரதீப்ராஜ், பயிற்சியாளராக இருக்கும் இவர், தொழில் ரீதியாக, உள்ள வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்தார்.
தொழில்முறை சான்றிதழை புதுப்பிக்க, பணம் அனுப்ப வேண்டும் என, வாட்ஸ் ஆப்பில் ஒரு நபர் பேசினார். அதை நம்பிய அவர், 1.42 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிராஜன். இவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் டிரேடிங்கில் பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அந்த நபர் அனுப்பிய லிங் மூலம் 1.15 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
லாஸ்பேட்டையை சேர்ந்த ஜானிமேரி 4 ஆயி ரம், காட்டேரிக்குப்பம் சுரேந்தர் 6 ஆயிரம், முத்தியால்பேட்டை முகமது பைசல் 6 ஆயிரம், வில்லி யனுார் டேனியல் ராஜ்3 ஆயிரம், மதகடிப்பட்டு மணிமேகலை 3 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.