/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்காததால் இழப்பு ரூ.2,800 கோடி: கவர்னர் மாநில வருவாய் உரிமை பெற்றுத்தர வேண்டும்
/
புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்காததால் இழப்பு ரூ.2,800 கோடி: கவர்னர் மாநில வருவாய் உரிமை பெற்றுத்தர வேண்டும்
புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்காததால் இழப்பு ரூ.2,800 கோடி: கவர்னர் மாநில வருவாய் உரிமை பெற்றுத்தர வேண்டும்
புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்காததால் இழப்பு ரூ.2,800 கோடி: கவர்னர் மாநில வருவாய் உரிமை பெற்றுத்தர வேண்டும்
ADDED : நவ 01, 2024 05:40 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் பல ஆண்டுகளாக நிதி கமிஷனில் சேர்க்காமல் தொடர்ந்து, புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆண்டிற்கு 2,800 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாகபிரதமருடன் பேசி, மாநில வரி வருவாய் உரிமையை பெற்று தர வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் 280வது பிரிவின் கீழ் செயல்படும் நிதி ஆணையம், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கான கொள்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குகிறது.
இது மாநிலங்களை மட்டுமே கையாள்வதால், யூனியன் பிரதேசங்கள் நிதி ஆணையத்தில் சேர்க்காமல் எல்லைக்கு வெளியே வைக்கப்படுகின்றன. இதனால் சட்டசபையுடன் கூடிய மாநிலமாக இருந்தாலும், புதுச்சேரி நிதி கமிஷனில் இதுவரை சேர்க்கப்படவில்லை. வரி வருவாயில், பகிர்வும் தரப்படவில்லை.
அதே வேளையில், சட்டசபையுடன் கூடிய புதுச்சேரிக்கு பின் யூனியன் பிரதேசமாக முளைத்த, ஜம்மு காஷ்மீர் 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் சேர்க்கப்பட்டு, பலன்களை பெற துவங்கியுள்ளது. ஆனால், 35 ஆண்டுகளாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்று ஒரே காரணத்தை கூறி, அடுத்தடுத்த நிதி கமிஷன்களால் சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இது ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் செயலாக உள்ளது.
நிதி கமிஷனில் புதுச்சேரி சேர்க்கப்பட்டால், ஆண்டிற்கு 2,000 கோடி ரூபாய் வரி வருவாய் மாநிலத்திற்கு கிடைக்கும். இது தவிர உள்ளாட்சி அமைப்பிற்கும் ஆண்டிற்கும் 800 கோடி ரூபாய் தனியாக கிடைக்கும். ஆனால் நிதி கமிஷனில் புதுச்சேரி சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் ஆண்டிற்கு 2,800 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டு வருகின்றது.
புதுச்சேரி அரசு பல முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியாகி விட்டது. ஆனாலும் நிதி கமிஷனில் ஏனோ புதுச்சேரி சேர்க்காமல் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தின் பிரதமரின் நிழலாக இருந்தவர் கவர்னர் கைலாஷ்நாதன். இந்த விஷயத்தில் கவர்னர் நேரடியாக களம் இறங்கி, மாநில வரி வருவாய் உரிமை பெற வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சருடன் நேரடியாக பேசி, புதுச்சேரியை அடுத்த நிதி கமிஷனில் சேர்க்க நடவடிக்கை எடுத்தால் மாநில வளர்ச்சிக்கு பெரிய உதவியாக இருக்கும்.
என்ன செய்யலாம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 280 (3) இன் படி நிதிக்குழு நியமிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இதில் ஒரு சிறிய திருத்தத்தை மட்டும் செய்தாலே புதுச்சேரி பயனடையும். அதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 280 (3)ல் உள்ள மாநிலம் என்ற பதத்தில் “சட்டசபை உள்ள யூனியன்பிரதேசங்களும்” அடங்கும் என்ற திருத்தத்தைக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அல்லது நிதிக்குழுவின் வரையறைகளில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களுக்கும் நிதிக் குழுவின் பரிந்துரைகள் பொருந்தும் என்று கூற வேண்டும். அரசியலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை காட்டிலும், நிதி குழு வரையறைகளில் எளிதாக விதிகளை புகுத்தி, புதுச்சேரியை நிதி கமிஷனில் இணைப்பது நடைமுறையில் எளிதில் சாத்தியம் தான். இதற்கான முயற்சியை பிரதமர், உள்துறை அமைச்சரிடம் கவர்னர் நேரடியாக பேசி எடுக்க வேண்டும். இந்த திருத்தங்களை செய்து, மாநிலத்திற்கான வரி பகிர்வு நிதியை பெற்றதால் தான் பிரதமர் கூறியதை போன்று புதுச்சேரியை 'பெஸ்ட்' புதுச்சேரியாக மாற்ற முடியும்.