/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ.2.89 லட்சம் 'அபேஸ்'
/
6 பேரிடம் ரூ.2.89 லட்சம் 'அபேஸ்'
ADDED : நவ 11, 2025 11:41 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 6 பேர் ரூ.2.89 லட்சம் இழந்துள்ளனர்.
பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர், இன்ஸ்டாகிராமில் குறைந்த விலைக்கு ஐ போன் விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். அதனை ஆர்டர் செய்தபோது, அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் முன்பணம் செலுத்தும்படி தெரிவித்தார். அதைநம்பி மர்மநபருக்கு ரூ. 80 ஆயிரத்து 600 செலுத்தினார். ஆனால், ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டிற்கு வரவில்லை. அதன்பின் மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், வில்லியனுாரை சேர்ந்தவர் 81 ஆயிரத்து 792, சண்முகாபுரத்தை சேர்ந்த பெண் 58 ஆயிரத்து 968, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெண் 47 ஆயிரத்து 351, லாஸ்பேட்டை சேர்ந்தவர் 14 ஆயிரத்து 200, சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் 7 ஆயிரம் என, 6 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 911 ரூபாய் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

