ரூ.37 லட்சம் மதுபாட்டில் ரெஸ்ட்டோ பாரில் பறிமுதல்
ரூ.37 லட்சம் மதுபாட்டில் ரெஸ்ட்டோ பாரில் பறிமுதல்
ADDED : ஏப் 05, 2026 06:40 PM

அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் ரெஸ்ட்டோ பாரில் பதுக்கி வைத்திருந்த 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை தேர்தல் பறக்குப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் நேருவீதியில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ரெஸ்டோ பாரில் அனுமதியின்றி மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார், ரெஸ்டோ பாரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
உடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைந்தனர்.
