/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் செயற்கை பவளபாறைகள் நிறுவ ரூ.4.34 கோடி: 14 இடங்களில் அமைப்பதற்கு டெண்டர்
/
கடலில் செயற்கை பவளபாறைகள் நிறுவ ரூ.4.34 கோடி: 14 இடங்களில் அமைப்பதற்கு டெண்டர்
கடலில் செயற்கை பவளபாறைகள் நிறுவ ரூ.4.34 கோடி: 14 இடங்களில் அமைப்பதற்கு டெண்டர்
கடலில் செயற்கை பவளபாறைகள் நிறுவ ரூ.4.34 கோடி: 14 இடங்களில் அமைப்பதற்கு டெண்டர்
ADDED : ஆக 26, 2024 05:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் 4.34 கோடி ரூபாய் செலவில் செயற்கை பவள பாறைகளை கடலில் இறக்க பொதுப்பணித் துறை வாயிலாக டெண்டர் விடப்பட்டுள்ளது.
கடலில் பல்லுயிர்கள் தழைக்கும் நிலை தொடர பவள பாறைகள் மிகவும் முக்கியமானது. இந்த பவள பாறைகள் என்பது பல வகையான கடல் வாழ் உயிரினங்கள் அடங்கிய வாழ்விடம். கடலில் ஆழம் குறைந்த, சூரிய வெளிச்சம் அதிகம் கிடைக்கும் பகுதி களில் இவை வளர்கின்றன.
கடலில் நீரோட்டத்தை கட்டுப்படுத்தி, சிறு மீன்கள் ஒளிவதற்கான இடங்களை இவை ஏற்படுத்துவதால், பல வகையான கடல் வாழ் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு, பவளப் பாறைகள் உதவியாக உள்ளன. இதனால் இங்கு, வீசப்படும் மீனவர் வலைகளில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் கிடைக்கின்றன.
புதுச்சேரி கடல் பகுதியில் இது போன்ற பெரிய பவளப்பாறைகள் இல்லாத சூழ்நிலையில், மீனவர்கள் மீன்களை தேடி கடலில் வலைகளுடன் பல கடல் மைல் தொலைவிற்கு அலைய வேண்டியுள்ளது.
எனவே பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் செயற்கையாக பவள பாறைகளை நிறுவ புதுச்சேரி அரசின் மீன்வளத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் மீன்வளத்தை மேம்படுத்த முதல் கட்டமாக 14 இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவுவதற்காக மத்திய அரசு 4 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகளில் செயற்கை பவளபாறைகளை நிறுவ தற்போது பொதுப்பணித் துறை வாயிலாக டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதியானது. விரைவில் செயற்கை பவளபாறைகள் புதுச்சேரி கடலில் இறக்கிவிடப்பட உள்ளது.
புதுச்சேரி கடல் பகுதியில் செயற்கை பவள பாறைகளை இறக்க ஏற்கனவே மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன நிபுணர் குழு புதுச்சேரி வந்து ஆய்வு செய்தது.
மேலும் இக்குழு மீனவர்களிடம் பவளப்பாறைகள் நிறுவுவதற்கான இடங்கள் குறித்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, மீனவர்கள் சுட்டி காட்டியுள்ள இடங்களில் இந்த செயற்கை பவளபாறைகள் இறக்கிவிடப்பட உள்ளன.
புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை புதுச் சேரியில்-20376.50 மெட்ரிக் டன், காரைக்கால்-5079, மாகி-5495, ஏனாம்-2952 என மொத்தம் 33,902.50 மெட்ரிக் டன் மீன்கள் ஆண் டுக்கு பிடிக்கப்படுகிறது.
செயற்கை பவள பாறைகள் கடலில் இறக்கும்போது கடலில் பல்லுயிர் சூழல் அதிகரிக்கும். இந்த செயற்கை பவளப்பாறை களை மீன்கள் மறைவிடமாக பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து மீன்வளத்தினை பல மடங்காக பெருக்கும். இதன் மூலம் பல மெட்ரிக் டன் மீன்கள் புதுச்சேரியில் கூடுதலாகவே பிடிக்கப்பட்டு, உள்ளூர் தேவைக்கு போக, ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது.

