தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி


UPDATED : நவ 25, 2026 11:52 PM

ADDED : நவ 25, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 11:52 PM ADDED : நவ 25, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு, ஒத்தவாடை வீதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின், 61; ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியர். இவர், நடேசன் நகரில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அதில், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 10ம் தேதி ரூ. 7 லட்சமும், அக்., 21ம் தேதி ரூ.12 லட்சமும் என தலா 2 ஆண்டு காலத்திற்கு 7.75 சதவீத வட்டியில் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தினர்.

கடந்த அக்., 26ம் தேதி இவரது மொபைல் எண்ணிற்கு வங்கியிலிருந்து குறுச்செய்தி வந்தது. அதில், அக்., 21ம் தேதி செலுத்திய ரூ.12 லட்சம் நிரந்தர வைப்பு நிதி முன்கூட்டியே முடிக்கப்பட்டு, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அன்றைய தினமே அவரது வங்கி கணக்கிலிருந்து அனுமதியின்றி 5 தவணைகளாக 7 லட்சத்து 56 ஆயிரத்து 53 ரூபாயை மர்ம நபர்கள் எடுத்தனர்.

இதைகண்டு, அதிர்ச்சியடைந்த ஜஸ்டின் உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு வங்கி கணக்கை முடக்கியதுடன், தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அக்., 27ம் தேதி இவரது வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 53 மீண்டும் திரும்ப வந்தது. மீதமுள்ள ரூ.5.50 லட்சம் திரும்ப வரவில்லை.

இதுகுறித்து, ஜஸ்டின் நேற்று சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us