/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை
ADDED : ஜன 15, 2025 12:25 AM
காரைக்கால் : காரைக்காலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி வரிச்சிக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி வாசுகி, 62; இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவரை இழந்த வாசுகி மட்டும் தனியாக காரைக்காலில் வசித்து வருகிறார்.
இவர், கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பொங்கல் பண்டிகைக்காக கடந்த 12ம் தேதி இரவு வாசுகி வீட்டிற்கு வந்தபோது, கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களும், மாடியில் பீரோவில் வைத்திருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது.
புகாரின்பேரில் கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார், விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.