/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு
/
ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு
ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு
ரூ. 54 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் துவக்கிவைப்பு
ADDED : மார் 15, 2024 12:13 AM

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதியில் மொத்தம் ரூ. 54 கோடி மதிப்பீட்டில்  பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். அதில், கணபதி செட்டிக்குளம் மீனவ கிராமத்தில், கடல் அரிப்பு தடுக்க ரூ. 6.37 கோடி, பெரியகாலாப்பட்டு மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைக்க ரூ. 20.14, கருவடிக்குப்பம், பெரிய காலாலப்பட்டு வள்ளுவர் தெரு, ஆலக்குப்பம் அன்னை நகர் ஆகிய இடங்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல இடங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்யாணம்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியார் மலைவாசன், உதவிப்பொறியாளர் ராமநாதன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் உட்பட மீனவ கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காலாப்பட்டு தொகுதியில் ரூ. 54 கோடி மதிப்பில்  பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

