/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தியவர்களுக்கு... ரூ. 7.4 கோடி மானியம்; இப்போதே திட்டமிட்டால் பணத்தை சேமிக்கலாம்
/
வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தியவர்களுக்கு... ரூ. 7.4 கோடி மானியம்; இப்போதே திட்டமிட்டால் பணத்தை சேமிக்கலாம்
வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தியவர்களுக்கு... ரூ. 7.4 கோடி மானியம்; இப்போதே திட்டமிட்டால் பணத்தை சேமிக்கலாம்
வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தியவர்களுக்கு... ரூ. 7.4 கோடி மானியம்; இப்போதே திட்டமிட்டால் பணத்தை சேமிக்கலாம்
ADDED : ஜூன் 21, 2025 06:15 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் சூரிய ஒளி மின் திட்டத்தின் மூலம் மின் உற்பத்தி செய்த 1,079 பேருக்கு 7.4 கோடி மானியத்தை மின் துறை செலுத்தியுள்ளது.
நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.75,000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டில் பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
அரசு மானியங்கள் கிடைப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றன. புதுச்சேரியை பொருத்தவரை இதுவரை 1,079 பேரின் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு இதுவரை 7.4 கோடி ரூபாய் மானியத்தை வங்கி கணக்கில் புதுச்சேரி அரசு செலுத்தியுள்ளது.
அடுத்ததாக கடந்தாண்டு சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்த மின் உற்பத்தியாளர்களுக்கு மானியம் செலுத்துவதற்காக வங்கி கணக்கு விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சோலார் பயனாளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. நீங்களும் இதுமாதிரி உங்களுடைய வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதன் மூலம் மின் உற்பத்தி செய்து, உங்கள் வீட்டிற்கும் ஜூரோ மின் கட்டண பில்லை வர வைக்க முடியும். அத்துடன் மின் உற்பத்தி செய்து அரசிடமிருந்தே பணம் சம்பாதிக்கவும் முடியும்.
அதற்கான வழிமுறைகளை மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்திய பிறகு மின் உற்பத்தி துவங்கும். ஒவ்வொரு மாதமும் சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் துறை ஊழியர்கள் வந்து கணக்கீடு செய்வர். உங்களுடைய பயன்பாட்டிற்கு போக நீங்கள் கூடுதலாக உற்பத்தி செய்த சோலார் மின்சாரம், சோலார் அக்கவுண்ட்டில் குறித்து வைத்து கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாதமும் இப்படி கணக்கீடு நடக்கும். மார்ச் மாதம் முடிந்ததும் அந்த ஆண்டில் நீங்கள் ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்த சோலார் மின்சாரத்தில் இருந்து நீங்கள் வீடுகளில் பயன்படுத்திய மின்சாரம் கழித்து கொள்ளப்படும்.
அதன் பிறகு கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட சோலார் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.5.77 வீதம் கணக்கீட்டு உங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதன் மூலம் நீங்கள் வருவாயும் ஈட்டலாம். வீடுகளில் இந்த சோலார் பேனல்கள் பொருத்தவும் அரசு மானியம் வழங்கி வருகிறது என்றனர்.
இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்தப்படும்.
மானிய விவரங்கள் என்னென்ன?