ரூ.8 லட்சம் மதுபானங்கள் பறிமுதல் 3 கடைகளுக்கு சீல்; கலால் துறை அதிரடி
ரூ.8 லட்சம் மதுபானங்கள் பறிமுதல் 3 கடைகளுக்கு சீல்; கலால் துறை அதிரடி
ADDED : மார் 28, 2026 05:18 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி இதுவரை 8 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மதுகடத்தலை தடுக்க கலால் துறை ஆணையர் விக்ராந்த் ராஜா, துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையில் அனைத்து எல்லை பகுதிகளிலும் தீவிர ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதுவரை 3,050 லிட்டர் மதுபானங்களை கலால் துறை பறிமுதல் செய்துள்ளது.
இது சம்பந்தமாக 4 வழக்குகள் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களில் மதிப்பு 8,69,000 ஆகும். மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 மதுபான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
