ரூ. 8 ஆயிரம் குட்கா பறிமுதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை
ரூ. 8 ஆயிரம் குட்கா பறிமுதல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை
ADDED : ஆக 30, 2026 05:02 PM
புதுச்சேரி: ரூ.8 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தன்வந்தரி நகர் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சித்தன்குடி சாலையிலுள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று கடையை சோதனை செய்தபோது, ஹான்ஸ், கூல்லீப், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் சாரம், கவிக்குயில் நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர், 60, மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்பேரில், குட்கா பொருட்களை கடைக்கு சப்ளை செய்த தர்மாபுரி, வள்ளலார் வீதியை சேர்ந்த சரவணன், சண்முகபுரம், ஜீவா வீதியை சேர்ந்த முருகவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
