/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 80 ஆயிரம் குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
/
ரூ. 80 ஆயிரம் குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
ADDED : ஜன 16, 2025 05:52 AM

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, விற்பனை செய்தவரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று இரவு மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார், 61; என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் இருந்த ரூ.80,000 மதிப்பிலான 55 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.