/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக ரூ.90,000 மோசடி
/
விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக ரூ.90,000 மோசடி
ADDED : அக் 01, 2025 07:31 AM
புதுச்சேரி : கதிர்காமத்தை சேர்ந்த நபர், ஆன்லைனில் விமான டிக்கெட் பதிவு செய்ய தேடி வந்தார். அப்போது, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், விமான டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாகவும், அதற்கு பணம் செலுத்தும்படி கூறி உள்ளார். அதைநம்பி, மர்மநபருக்கு 90 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார். அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதேபோல், திலாஸ்பேட்டையை சேர்ந்த பெண், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, 52 ஆயிரத்து 790, நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் 7 ஆயிரத்து 500 என, 3 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 290 ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.