/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.கே.டி., சாலையை சீரமைக்க ரூ. 923 கோடி நிதி ஒதுக்கீடு
/
வி.கே.டி., சாலையை சீரமைக்க ரூ. 923 கோடி நிதி ஒதுக்கீடு
வி.கே.டி., சாலையை சீரமைக்க ரூ. 923 கோடி நிதி ஒதுக்கீடு
வி.கே.டி., சாலையை சீரமைக்க ரூ. 923 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஜன 18, 2025 05:24 AM
விக்கிரவாண்டி : வி.கே.டி. சாலை பணியில் சேத்தியாதோப்பு பின்னலுார் வரை கிடப்பில் உள்ள சாலையை சீரமைக்க ரூ. 923 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் வரை (வி.கே.டி. சாலை) 165 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றிட 2586.10 கோடி ரூபாய் நிதியை கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள், மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டன. இதில் விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு பின்னலுார் வரை 65 கி.மீ துார சாலை பணி சரிவர நடக்காததால் ஒப்பந்தத்தை நகாய் ரத்து செய்தது.
இந்நிலையில், கிடப்பில் உள்ள பணிகளோடு, தேவையான இடங்களில் 4 மேம்பாலங்கள் அமைக்க 923 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கான இ - டெண்டர்கள் வரவேற்கப்பட்டது. வரும் 23ம் தேதி டெண்டர்கள் திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்பட உள்ளார். பிப்ரவரியில் பணியை துவங்கி, 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் வி.கே.டி., சாலையில் பேட்ச் ஒர்க் செய்ய ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த நவம்பர் மாதம் முதல் பணிகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக நிறுத்தப்பட்டுள்ள பணி வரும் வாரம் முதல் துவங்கி, 'பேட்ச் ஒர்க் செய்து முடிக்கப்படும் என 'நகாய்' அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.