/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 35,000 மதிப்பிலான குட்கா பறிமுதல்
/
ரூ. 35,000 மதிப்பிலான குட்கா பறிமுதல்
ADDED : நவ 13, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, முத்திரையர் பாளையம் பகுதியில் பள்ளி கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப் இன்ஸ் பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று, அங்கிருந்த பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர். முத்திரையர்பாளையம் காந்தி திருநள்ளூரில் ராணி, 60; என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ராணியை கைது செய்த போலீசார், கடையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.