/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 25 லட்சத்தில் தார் சாலை பணிகள் எதிர்க்கட்சி தலைவர் துவக்கி வைப்பு

ADDED : பிப் 01, 2024 05:10 AM

புதுச்சேரி: கொம்பாக்கம் பகுதியில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியை, எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
வில்லியனூர்தொகுதி, கொம்பாக்கம், 33வது வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி நீச்சல் குளத்தில் இருந்து ஒட்டாம்பாளையம் தண்ணீர் தொட்டி வரையிலான சுடுகாட்டு பாதைக்கு பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு பிரிவின் சார்பில், புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணி, துவங்கியது.இதன் திட்ட மதிப்பீடு 25 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்.
பாப்பாஞ்சாவடியில் நடந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, பணிகளை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை, கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு பிரிவின் உதவிப் பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.