/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ.10.47 லட்சம் 'அபேஸ்'
/
3 பேரிடம் ரூ.10.47 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 25, 2026 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுாரை சேர்ந் தவர், மொபைல் செயலி மூலம் ரூ.4 லட்சத்து 61 ஆயிரத்து 817 கடன் வாங்கி, அதனை முழுதும் திரும்ப செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், அவரது படத்தை மார்பிங் செய்து அனுப்பி, கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதில் பயந்துபோன அவர், மர்ம நபருக்கு ரூ. 9 லட்சத்து 17 ஆயிரத்து 290 அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், பாகூரைச் சேர்ந்த பெண், 1 லட்சத்து 24 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 6 ஆயிரம் என, 3 பேர் மோசடி கும்பலிடம் 10 லட்சத்து 47 ஆயிரத்து 290 ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

