/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ.1.68 லட்சம் 'அபேஸ்'
/
5 பேரிடம் ரூ.1.68 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 21, 2026 05:02 AM
புதுச்சேரி: 5 பேரிடம் ரூ. 1.68 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏம்பலத்தை சேர்ந்த நபரை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட, மர்ம நபர் தன்னை வங்கி அதிகாரி என, கூறினார். கிரெடிட் கார்டு வழங்குவதாக கூறி, ஏ.டி.எம்., விவரங்களை கேட்டார். அதனை நம்பி, அவர் ஏ.டி.எம்., விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை மர்ம நபரிடம் பகிர்ந்தார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 334 ரூபாய் மாயமானது.
இதேபோல் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 30 ஆயிரம் ரூபாய், அதே பகுதியை சேர்ந்த நபர் 9 ஆயிரத்து 500, மற்றொரு நபர் 5 ஆயிரத்து 250, வி.மணவெளியை சேர்ந்த நபர் 8 ஆயிரம் என, மொத்தம் 5 பேர் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 84 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.

