/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.85 கோடி திட்டப் பணிகள் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
/
ரூ.1.85 கோடி திட்டப் பணிகள் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
ரூ.1.85 கோடி திட்டப் பணிகள் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
ரூ.1.85 கோடி திட்டப் பணிகள் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
ADDED : மார் 05, 2024 04:55 AM

வில்லியனுார்: மங்கலம் தொகுதியில் பொதுப் பணித்துறை சார்பில் ரூ.1.85 கோடி செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேளாண்துறை அமைச்சர் பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில் ரூ. 1.85 கோடி திட்ட மதிப்பீட்டில் மங்கலம் அரசு பள்ளி முதல் புதுக்குப்பம் வரை தார் சாலையும், உறுவையாறு முதல் மங்கலம் வரை மெயின்ரோட்டில் கழிவுநீர் வாய்க்கால் வசதியும்.
அதேபோன்று புதிய பைபாஸ் சாலையில் இருந்து மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் வரையும். ஈடன் கார்டன் முதல் மாரியம்மன் கோவில் வரையிலும் 'யு' வடிவ கழிவுநீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் கோபி, இளநிலை பொறியாளர்கள் நடராஜன் மற்றும் அர்ச்சுனன் மங்கலம் கிராம என்.ஆர். காங்., பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

