தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உரிமம் இல்லாமல் நாய்கள் வளர்த்தால் ரூ.2,000 அபராதம்; கமிஷனர் எச்சரிக்கை

 உரிமம் இல்லாமல் நாய்கள் வளர்த்தால் ரூ.2,000 அபராதம்; கமிஷனர் எச்சரிக்கை

 உரிமம் இல்லாமல் நாய்கள் வளர்த்தால் ரூ.2,000 அபராதம்; கமிஷனர் எச்சரிக்கை


ADDED : ஜன 10, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உரிமம் இல்லாமல் வீடுகளில் நாய்கள் வளர்த்தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுப்ரீம் கோர்ட் நாய்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை செயல்படுத்தும் பொருட்டு, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை முறைப்படுத்துவதற்கு ஏற்ப, இந்நகராட்சி மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் பிரதி புதன்கிழமை தோறும் வளர்ப்பு நாய்களுக்கு புதிய உரிமத்திற்கு நாய் ஒன்றுக்கு 150 ரூபாய் மற்றும் புதுப்பித்தலுக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் நாய்களுக்கு இம்மாதத்திற்குள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அப்படி உரிமம் பெறாமல் நாய்கள் வீடுகளில் வளர்ப்பது கண்டறியப்பட்டால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், இன்னும் உரிமம் வாங்காமல் வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதாக நகராட்சிக்கு தெரிய வருகிறது. நகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுவினர் இன்று 10ம் தேதி உரிமம் பெறாமல் உள்ளவர்களை கண்டறிந்து உரிமம் வழங்க உள்ளனர்.

எனவே, காமராஜ் நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர்,​தாகூர் நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், அசோக் நகர், குமரன் நகர், குறிஞ்சி நகர்,​வாசன் நகர், நாவற்குளம், அன்னிபெசன்ட் நகர், விவேகானந்தா நகர், தந்தை பெரியார் நகர், சாரதாம்பாள் நகர், ஜவகர் நகர், மூகாம்பிகை நகர், பொன் நகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், ராஜிவ் நகர் பகுதிகளில் வீடுகளில் நாய்கள் வளர்ப்போர் அணுகி உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

மற்ற பகுதிகளில் இந்நடவடிக்கை வரும் வாரங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us