/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொத்தமாக மதுபானம் வாங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
/
மொத்தமாக மதுபானம் வாங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
மொத்தமாக மதுபானம் வாங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
மொத்தமாக மதுபானம் வாங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
ADDED : மார் 19, 2024 05:28 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தமாக மதுபானம் வாங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் காரணமாக இரவு 10:00 மணி வரை மட்டுமே அனைத்து வகையான மதுபான கடைகளின் விற்பனை நேரம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இரவு 9:30 மணிக்கே மதுபான பார்கள் மூடப்பட்டு விடுகிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு மதுபான பார்கள் முன்பு சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை சந்திப்பில் உள்ள தனியார் மதுபான கடைக்கு 3 கார்களில் வந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், பிறந்த நாள் பார்டிக்காக 24 பீர், 750 மி.லி. அளவுள்ள 6 புல் பாட்டில் மதுபானம் வாங்கி காரில் ஏற்றினர்.
மதுபான வாசலில் நின்றிருந்த ஒதியஞ்சாலை போலீசார், சுற்றுலா பயணிகள் வாங்கிய மதுபானங்கள் பறிமுதல் செய்து கலால் துறையில் ஒப்படைத்தனர்.மொத்தமாக மதுபானம் வாங்கியதாக சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதுபோல் நெட்டபாக்கத்தில் ரூ. 2000 மதிப்புள்ள மதுபானம் வாங்கிய நபருக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர, நேற்று முன்தினம் அனுமதித்த நேரத்தை தாண்டி இயங்கியதாக 2 மதுபான கடைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

