/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.5.25 லட்சம் 'அபேஸ்'
/
புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.5.25 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 07, 2026 05:08 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ. 5.25 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டையை சேர்ந்த நபரின் மொபைல் எண்ணிற்கு மர்ம நபர் போலியான ஆர்.டி.ஓ., இ- செலான் லிங்கை அனுப்பினார். இதனை உண்மையென நம்பிய அவர், லிங்கை ஓபன் செய்து அதில் தனது வங்கி விவரங்களை உள்ளீடு செய்தார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து, 3 லட்சத்து 64 ஆயிரத்து 718 ரூபாய் மாயமாகியுள்ளது. இதேபோல், மதகடிப்பட்டு நபர் 11 ஆயிரத்து 150 ரூபாய், கீழூர் பெண் 13 ஆயிரத்து 442, வில்லியனுார் நபர் 12 ஆயிரத்து 900, அரியாங்குப்பம் பெண் ஆயிரத்து 551, சாரம் நபர் 3 ஆயிரத்து 700, அரியாங்குப்பம் நபர் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 687, என மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 148 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

