/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல், மழை பாதித்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி நிவாரண உதவி
/
புயல், மழை பாதித்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி நிவாரண உதவி
புயல், மழை பாதித்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி நிவாரண உதவி
புயல், மழை பாதித்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி நிவாரண உதவி
ADDED : டிச 03, 2024 06:22 AM

புதுச்சேரி: புயல் பாதித்த தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி தன்னார்வலர்கள் களம் இறங்கி நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமான ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கீழ் சேவா பாரதி பிரிவு இயங்கி வருகின்றது. பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இப்பிரிவில், தன்னார்வலர்கள் தன்னலம் பாராது தொண்டு செய்கின்றனர். இந்த அமைப்பினர் பெருவெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது களம் இறங்கி மக்களுக்கு துயர் துடைத்து வருகின்றது.
இப்போது, பெஞ்சல் புயல் பாதித்த மரக்காணம், திண்டிவனம், விழுப்புரம், கடலுார், புதுச்சேரியில் பகுதிகளில் களம் இறங்கி தொடர்ந்து உதவி வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் 1750 பேருக்கு இரு வேளை உணவு வழங்கினர். நேற்று 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. ஜிப்மர், அரசு பொதுமருத்துமனையில் 6 ஆயிரம் பேருக்கு ரொட்டி, பால் வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி தன்னார்வலர்கள் மூலம் உணவு சுடச்சுட சமைத்து, வாகனங்களில் கொண்டு சென்று, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடு வீடாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து மீட்பு பணிகளில் ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி தன்னார்வலர்கள் களம் இறங்கி நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். மீட்பு பணி மற்றும் நிவாரண உதவிகளில் ஈடுபட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி அமைப்பு தன்னார்வலர்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினார்.