/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி துாய்மை பணி
/
ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி துாய்மை பணி
ADDED : டிச 09, 2024 04:45 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவா பாரதி அமைப்பினர் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் துாய்மை தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், முதலியார்பேட்டை பகுதி அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்ற பல்வேறு பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் சேவா பாரதியின் பொறுப்பாளர்கள் குணசேகரன், தனபால், ரமேஷ், பா.ஜ., நகர மாவட்ட தலைவர் சக்தி கிருஷ்ணராஜ் ஆகியோர் செய்தனர்.