/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவருக்கு இழப்பீடு கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
இறந்தவருக்கு இழப்பீடு கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
இறந்தவருக்கு இழப்பீடு கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
இறந்தவருக்கு இழப்பீடு கோரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 01, 2025 07:17 AM

புதுச்சேரி : இறந்தவருக்கு இழப்பீடு வழங்க கோரி, நேரு எம்.எல்.ஏ., தலைமையில், உறவினர்கள் போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
உருளையன்பேட்டை, சங்கோதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் டெர்னிஸ் மனைவி பழனியம்மாள். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், ஆட்டோ மோதி இறந்தார். இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, உறவினர்கள்நேற்று நுாறடி சாலையில், மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின், போக்குவரத்துத் துறை அலுவலகம் முன், எம்.எல்.ஏ., தலைமையில், இறந்தவரின் உறவினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.பர்மிட்மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கும் ஆட்டோவை முறைப்படுத்த வலியுறுத்தி, நேற்று காலை 10:30 மணியளவில், முற்றுகையில் ஈடுபட்டனர்.
அதையடுத்து,போக்குவரத்துறை ஆணையர் சிவக்குமார் இந்த பிரச்னை தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.