/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.ஐ., ரெய்டு விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி: சட்டசபையில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் முடிவு
/
சி.பி.ஐ., ரெய்டு விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி: சட்டசபையில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் முடிவு
சி.பி.ஐ., ரெய்டு விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி: சட்டசபையில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் முடிவு
சி.பி.ஐ., ரெய்டு விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி: சட்டசபையில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் முடிவு
ADDED : மார் 24, 2025 04:12 AM

புதுச்சேரி: பல கோடிகள் புழங்கும் பொதுப்பணி துறையின் அதிகாரிகள் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் இன்று சட்டசபையில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
புதுச்சேரி என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசின் மீது காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து ஊழல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகின்றன.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒருபடி மேலேபோய், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. துறை ரீதியாக வந்த ஊழல்களை அறிக்கையாக தயாரித்து வருகிறோம்.
ஜனாதிபதியை நேரில் சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று அன்மையில் தெரிவித்து இருந்தார்.
எதிர்கட்சிகள் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்த சூழ்நிலையில், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்பட 3 பேர் சி.பி.ஐ., அதிகாரிகளால் கையும் களவுமாக லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள் ளனர்.
இவர்கள் மட்டுமின்றி, இன்னும் 10 பேர் சி.பி.ஐ., விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பல கோடி புழக்கம் உள்ள பொதுப்பணித்துறையின் தலைமையில் உள்ள முக்கிய அதிகாரிகள் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது.
ஆளும் என்.ஆர்., -பா.ஜ., கூட்டணி அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தினை, எதிர்கட்சிகள் கையிலெடுத்துள்ளன.
இன்றைய சட்டசபை கூட்டத் தொடரில் புயலை கிளப்ப காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
எனவே சட்டசபையில் நிகழ்ச்சிகள் இன்று அனல் பறக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு அதிகாரிகள் கிலி
புதுச்சேரி அரசு துறையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட 2,500 கோடிக்கு மேல் டெண்டர் பணிகள் நடந்து வருகின்றது. இதுதவிர ஜிப்மர், புதுச்சேரி பல்கலைக் கழகம் உள்பட அதிக எண்ணிக்கையிலான மத்திய அரசு நிறுவன அலுவலங்கள், உள்ளன.
இது மட்டுமின்றி, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த கோடிக்கான ரூபாய் நிதிக்கொடை புதுச்சேரிக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்வே மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஏராளமான உள்ளன.
எனவே, அரசு துறைகளை கண் கொத்தி பாம்பாக சி.பி.ஐ., தொடர்ந்து கண்கானித்து வருவகின்றது. இதனால் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
முடங்கிய சி.பி.ஐ., கிளை
புதுச்சேரி மாநிலத்தில் நில அபகரிப்பு, கட்டுமானம், ஒப்பந்தங்கள்,, நியமனங்களில் முறைகேடு நடந்தது.
புதுச்சேரியில் தொடர்ந்து சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வந்த சூழ்நிலையில் கவர்னர் கிரண்பேடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரி சி.பி.ஐ., கிளை ஒன்று, ஒரு கூடுதல் எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட ஆறு பேர் அடங்கிய கிளையாக அமைக்கப்பட்டது. ஆனால் செயல்படாமல் முடங்கிவிட்டது.
இந்த கிளையை மீண்டும் செயல்பாட்டிற்கு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், அரசு அதிகாரிகள் கையை நீட்டுவது குறையும்.