ADDED : பிப் 01, 2024 04:55 AM

திருக்கனுார்: சுத்துக்கேணி பகுதியில் நெல் சாகுபடி முறைகள் குறித்து காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் சந்திரசேகர், அஜய், ராஜா நாகமுத்து, ரகுபதி, சஞ்சய்குமார், ஹேமநாத்குமார், சாய் மோகித், சாய்ராம், சீனுவாசன் உள்ளிட்டோர் காட்டேரிக்குப்பம் பகுதியில் ஊரக வேளாண்பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, கொடாத்துார் பகுதிகளில் விவசாயிகளின் விவசாய நடைமுறைகள், நெல் சாகுபடி மற்றும் விற்பனை, அறுவடை முறை, நெல் தரம் குறித்து விவசாயிகளிடம் மாணவர்கள் கேட்டறிந்தனர். இதில், காட்டேரிக்குப்பம் உழவர் உதவியக வேளாண் அலுவலர் வெங்கடாசலம், களப்பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.