/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி
/
இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி
இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி
இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி
ADDED : ஜன 18, 2025 05:51 AM

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் இந்து கலை இலக்கிய முன்னணி சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.
இந்து கலை இலக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் நடிகர் கனல் கண்ணன் தலைமை தாங்கினார். இயக்குனர் மோகன், ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, கிராமிய கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். இந்து கலை இலக்கிய முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இயக்குனர் துரை, புதுச்சேரி இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆஸ்தான வித்வான் ரத்தினவேல் குழுவினரின் மங்கல இசை, மருது சகோதரர் வீரசிலம்பாட்ட கலைக்குழு, ராஜேந்திரன் குழுவினரின் புலி ஆட்டம், புதுச்சேரி தமிழிசை தப்பாட்டக் கலைக்குழு காளிதாஸ் குழுவினரின் பறையாட்டம், செங்காவி கலைக்கூடம் ஓவியர் துரையின் ஓவியம், தமிழ் நிழல் கலைக்குழு சுபாஷ் சந்திரபோஸ் குழுவினரின் மயிலாட்டம், கரகாட்டம், சுவாமி ராகவேந்திரா நாடக கலைக்குழு குப்பன் குழுவினரின் நாடகம் நடந்தது.
தொடர்ந்து, ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் நிறுவனர் ஜோதி செந்தில் கண்ணன் குழுவினரின் குத்துவரிசை, கர்லாகட்டை, மணலிப்பட்டு சுந்தரமூர்த்தி குழுவினரின் தெருக்கூத்து, அரசூர் வாராகி அம்மன் கலைக்குழு புவியரசன் குழுவினரின் பம்பை ஆட்டம், குரு ஸ்ரீமதி வைஷ்ணவி லட்சுமி நாராயணன் குழுவினரின் பரதம் நாட்டியம், ஐயனாரப்பன் கலைக்குழு ஜெய் ஆனந்த் குழுவினரின் கை சிலம்பு, தர்ஷினி நாட்டியாலயா குழுவினரின் பின்னல் கோலாட்டம், தமிழோசை கலைக்குழு வள்ளி குழுவினரின் கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடந்தன.