ADDED : மார் 14, 2024 05:30 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : களப்பயணமாக நகர பகுதிக்கு வந்த கிராமப்புற மாணவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினர்.
திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 70 மாணவ மாணவியர்கள் களப் பயணமாக புதுச்சேரி கடற்கரை, அருங்காட்சியகம், நுாலகம் என பல்வேறு இடங்களை நேற்று சுற்றிப் பார்த்தனர்.
அதை தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபைக்கு வந்த அம்மாணவ மாணவியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்.
முதல்வருடன் கலந்துரையாடினர்.
அவர்களுக்கு, சாக்லெட்டுகளை வழங்கிய முதல்வர் ரங்கசாமி மாணவ மாணவியர்கள் அனைவரும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்று வாழ்த்தினார்.
சபாநாயகர் செல்வம்,பள்ளித் தலைமையாசிரியர் சரவணன்,ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
