/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு அலுவலகங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
/
அரசு அலுவலகங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
அரசு அலுவலகங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
அரசு அலுவலகங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
ADDED : செப் 22, 2024 01:54 AM

அரசு அலுலகங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை காலத்தோடு அரசு ஏலம் விட வேண்டும்.
புதுச்சேரி அரசு அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் வாங்கப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவற்றை அகற்ற வேண்டும். ஆனால், அரசு அலுவலங்களில் காலத்தோடு கலாவதியான வாகனங்களை அகற்றப்படுவதில்லை.
மேற்கூரை இல்லாத வெட்ட வெளியில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மாறி மாறி வெயில், மழைக்காலங்களை எதிர்கொண்டு, நாளடைவில் துருப்பிடிக்கின்றன. மெல்ல மெல்ல சிதிலமடைந்து, எலும்புக்கூடாக மாறத் தொடங்குகின்றன. மேலும், திறந்து வெளியில் கேட்பாரற்ற கிடக்கும் இந்த வாகனங்களின் இன்ஜின், டயர், பேட்டரி உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்களை திருடிக்கொண்டு பழைய இரும்புக் கடைகளில் விற்கப்பட்டு விடுகின்றன.
இதுபோல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பரிதாபமான நிலையில் அரசு அலுவலக வளாகத்தின் உள்ளே பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துருப்பிடித்த வாகனங்களால் அரசு அலுவலக வளாகம் காயலான் கடைகள் போன்று காட்சியளிக்கின்றன.
இது போன்று அதிகரித்து வரும் வாகனங்கள் அரசு துறைகளுக்கு தலைவலியாக உள்ளன. வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால், வாகனங்கள் வீணாவதுடன் ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் கிடைக்காமல் போகிறது.
துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை காலத்தோடு ஏலம் விட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.