ADDED : மே 30, 2026 05:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி, அண்ணா சாலையில் அமைந்துள்ள சலானி ஜூவல்லரி மார்ட் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் சலானி குழுமத்தின் நிறுவன இயக்குனர் ஜெயந்திலால் சலானி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, சினிமா நடிகை ராக் ஷிகண்ணா ஆகியோர் கலந்துகொண்டு சலானி ஜூவல்லரி மார்ட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். சலானி குழுமத்தை சேர்ந்த ரிஷூப் சலானி, கவுதம் சலானி, ஸ்ரீபால் சலானி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சலானி குழுமத்தின் நிறுவன இயக்குனர் கூறுகையில், 'சலானி ஜூவல்லரி மார்ட் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் பாரம்பரியம், புதுமை, கலைத்திறன் மற்றும் நவீன நேர்த்திகளுடன் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வடிவடிமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளி பொருட்களுக்கு என, தனியாக முதல் தளத்தில் சமகால, பழங்கால, பாரம்பரிய, கைவினை மற்றும் தனித்துவமான வெள்ளி நகைகள் ஒவ்வொரு தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரையில் வலுவான மற்றும் வெற்றிகரமான இருப்பைக் கொண்டு வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ள சலானி ஜூவல்லரி மார்ட், புதுச்சேரியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆபரணமும் அழகின் கதையை சொல்லும், ஒவ்வொரு படைப்பும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும், ஒவ்வொரு பளபளப்பும் கொண்டாட்டத்தின் சின்னமாக விளங்கும் ஓர் இடத்தைக் காண வருமாறு சலானி ஜூவல்லரி மார்ட் நகைப் பிரியர்களை அன்புடன் அழைக்கிறோம்' என்றார்.
முன்னதாக வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சலானி ஜூவல்லரி மார்ட்டின் விளம்பர துாதரக ராக் ஷி கண்ணா நியமிக்கப்பட்டார். அவர் பேசுகையில், 'புதுச்சேரியில் சலானி குழுமத்தின் விளம்பர துாதுவராக நியமிக்கப்பட்டுள்ளது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
