/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை கொடுக்காமலே ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சம்பளம்
/
வேலை கொடுக்காமலே ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சம்பளம்
ADDED : டிச 15, 2024 05:56 AM
கடந்த 2011ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேசன். அருணாசல பிரதேசத்தில் இருந்து புதுச்சேரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, 04.10. 2024ல் புதுச்சேரி அரசிடம் ரிப்போர்ட் செய்து பணியிலும் சேர்ந்துவிட்டார்.
அவர் பணியில் சேர்ந்து இரண்டு மாதம் கடந்தும் கூட இன்னும் அவருக்கான பொறுப்புகள் வழங்கப்படவில்லை. பொதுவாக, புதுச்சேரிக்கு வரும் எந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கும் உடனடியாக பணியிடம் ஒதுக்கப்பட்டு விடும். ஆனால் ஐ.ஏ.எஸ்., சுந்தரேசனுக்கு மட்டும் பொறுப்பு வழங்காமல் இருப்பது மர்மமாக உள்ளது.
அதுவும், அவர் புதுச்சேரியில் தான் சிவில் சர்வீசஸ் பணியை துவங்கினார். படிப்படியாக அக்முத் கேடர்-2011 ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அப்படி ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்த அதிகாரியாக இருந்த போதிலும், பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சம்பளம், இதர படிகளை சேர்த்து தரப்படுகிறது. அப்படி இருக்கும்போதும், பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு பொறுப்பு கொடுத்து வேலை வாங்காமல் 'சும்மா' உட்கார வைத்திருப்பது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.