ஒழுங்கு முறை விற்பனை கூடம்:L என்.ஆர்.காங்., மோகன்தாஸ் உறுதி
ஒழுங்கு முறை விற்பனை கூடம்:L என்.ஆர்.காங்., மோகன்தாஸ் உறுதி
ADDED : ஏப் 06, 2026 09:29 PM

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ், தனிக்குப்பம், புதுக்குப்பம், செம்பியப்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
ஏம்பலம் தொகுதி என்.ஆர். காங்., வேட்பாளர் தொகுதி முழுவதும் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று செம்பிப்பாளையம், புதுக்குப்பம், சடகுளம், ஒத்தவாடு, நத்தமேடு, கம்பிளிகாரன்குப்பம், கோர்க்காடு பேட். கரிக்கலாம்பாக்கம் பேட் தனிக்குப்பம் பகுதியில் ஓட்டு சேகரித்தார். அப்போது வேட்பாளர் மோகன்தாஸ் பேசுகையில், இந்த பகுதியில் விவசாயிகள் அதிகம் உள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான களம், விவசாய நிலத்திற்கு செல்ல பாதை வசதி, தானியங்கள் சேகரித்து வைக்க சேமிப்பு கிடங்கும் , ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைத்து தரப்படும், இலவச மனைப்பட்டா, குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார். ஓட்டு சேகரிப்பின் போது அந்தந்த பகுதியில் பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
