தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சம்பத் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் 

 சம்பத் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் 

 சம்பத் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் 


ADDED : ஏப் 13, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 06:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாதானுார் ஏரிக்கரை சம்பத் விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

திருக்கனுார் அடுத்த வாதானுார்- பி.எஸ்.பாளையம் செல்லும் ஏரிக்கரையில் சம்பத் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மகா தீபாரதனை நடந்தது.

மாலை மிருத்சங்கிரஹணம், அங்கரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், முதற்கால யாக பூஜை, விசேஷ த்ரவ்யாஹீதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

முக்கிய நிகழ்வாக, நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜைகள் ஆரம்பம், ஆசார்ய விசேஷ சாந்தி, மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தம், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாஹூதி தீபாராதனை யாத்திராதானம், கடம்புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து, சம்பத் விநாயகர் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை, இரவு சம்பத் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us