/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரடைஸ் பீச்சில் மணல் திட்டு அகற்றம் மீண்டும் படகு சவாரி துவங்கியது
/
பாரடைஸ் பீச்சில் மணல் திட்டு அகற்றம் மீண்டும் படகு சவாரி துவங்கியது
பாரடைஸ் பீச்சில் மணல் திட்டு அகற்றம் மீண்டும் படகு சவாரி துவங்கியது
பாரடைஸ் பீச்சில் மணல் திட்டு அகற்றம் மீண்டும் படகு சவாரி துவங்கியது
ADDED : மே 19, 2025 06:23 AM

அரியாங்குப்பம்: பாரடைஸ் பீச்சில் மணல் திட்டுகள் அகற்றப்பட்டதால், மீண்டும் படகு சவாரி துவங்கியது.
புதுச்சேரிக்கு வரும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்வர். இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த பெஞ்சல் புயல் மற்றும் மழையால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நோணாங்குப்பம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதில், பாரடைஸ் பீச் முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாகின. அதையடுத்து, படகுகள் செல்ல முடியாமல் இருந்ததால், நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு, படகு சவாரி கடந்த 28ம் தேதி நிறுத்தப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சுற்றுலாத்துறைக்கு பல லட்சம் வருவாய் இழப்பீடு ஏற்பட்டது. இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதையடுத்து, பொதுப்பணித்துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம், ஆற்றில் மணல் திட்டுகளை அகற்றினர். மணல் திட்டுகள் அகற்றப்பட்டதை அடுத்து, படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு நேற்று முன்தினம் முதல் படகு சவாரி துவங்கியது. சுற்றுலாப் பயணிகள் பாரடைஸ் பீச்சிற்கு சென்று கடலில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, சில இடங்களில் இருக்கும் மணல் திட்டுகள் அகற்றும் பணிகள் நடந்தது.