தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரியாங்குப்பத்தில் துாய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம்

அரியாங்குப்பத்தில் துாய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம்

அரியாங்குப்பத்தில் துாய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், துாய்மை பணி விழாவையொட்டி, பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. புதுச்சேரியில் துாய்மை பணி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், துாய்மை பணியை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

பேரணி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வீராம்பட்டினம் சாலை வழியாக சென்று அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் செழியன் செய்திருந்தார்.

அதே போன்று, தவளக்குப்பத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாணவர்கள் துாய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us