ADDED : பிப் 05, 2026 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குப்பையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த, துாய்மை பணியாளரை காங்., பிரமுகர் பரிசு வழங்கி கவுரவித்தார்.
புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்தவர் ஜோதி, 58; துாய்மை பணியாளரான இவர், குருமாம்பேட் அமைதி நகரில், மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்த போது, ஒரு சவரன் தங்க நகை அவரிடம் கிடைத்தது.
அந்த நகையை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார்.
அதனையறிந்த காங்., ஓ.பி.சி., அணி மாநில தலைவர் கண்ணன், துாய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டி, அவருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது, துணை தலைவர் மணிகண்டன், பவித்ரன், ஹரிபிரசாத் உடனிருந்தனர்.

