ADDED : ஏப் 08, 2026 06:46 AM
புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆர்., சாலை சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் பட்டாபிராமன் வரவேற்றார். பள்ளி முதல்வர் சுமித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். காந்தி வீதி சங்கர வித்யாலயா பள்ளி முதல்வர் தர்மசம்வர்தனி, துணை முதல்வர் பவாணி ஆகியோர் மாணவர்களின் சாதனை பட்டியலை வாசித்தனர்.
சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சந்திரசேகந்திர சரவஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர் நிலை பல்கலைக்கழக கல்வித்துறை தலைவர் வேங்கடரமணன் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
கடந்த 2023-24 மற்றும் 2024-25ம் ஆண்டில் 10வது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், பாடவாரியாக நுாறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துணை முதல்வர் காயத்ரி நன்றி கூறினார்.
