/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கராபரணி ஆற்றங்கரை ரூ.23.75 லட்சத்தில் சீரமைப்பு
/
சங்கராபரணி ஆற்றங்கரை ரூ.23.75 லட்சத்தில் சீரமைப்பு
சங்கராபரணி ஆற்றங்கரை ரூ.23.75 லட்சத்தில் சீரமைப்பு
சங்கராபரணி ஆற்றங்கரை ரூ.23.75 லட்சத்தில் சீரமைப்பு
ADDED : செப் 25, 2025 11:29 PM

திருபுவனை: செல்லிப்பட்டில் சேதமடைந்த சங்கராபரணி ஆற்றின் வலது கரையை ரூ.23.75 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில் திருபுவுனை தொகுதி, செல்லிப்பட்டு கிராமத்தில் பிள்ளையார்குப்பம் அணைக்கட்டின் மேல் பகுதியில், சேதமடைந்த சங்கராபரணி ஆற்றின் வலது கரையை சீரமைக்கும் பணியை நேற்று அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் ஹரிராம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராம முக்கியஸ்தர்கள், ஜே.சி.எம்., மக்கள் மன்றத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.