/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முந்தி கொண்டது 'சுசி' கம்யூ., வேட்பாளராக சங்கரன் அறிவிப்பு
/
முந்தி கொண்டது 'சுசி' கம்யூ., வேட்பாளராக சங்கரன் அறிவிப்பு
முந்தி கொண்டது 'சுசி' கம்யூ., வேட்பாளராக சங்கரன் அறிவிப்பு
முந்தி கொண்டது 'சுசி' கம்யூ., வேட்பாளராக சங்கரன் அறிவிப்பு
ADDED : மார் 21, 2024 12:27 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் சுசி கம்யூ., கட்சி சார்பில் வழக்கறிஞர் சங்கரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் சுசி கம்யூ., (சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா- கம்யூ.,) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இ.சி.ஆர்., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.
அப்போது, லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் சுசி கம்யூ., கட்சி சார்பில், கட்சியின் தயாரிப்பு கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் சங்கரன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சங்கரன் கம்யூ., இயக்கங்களில் பணியாற்றியவர். புதுச்சேரி விடுதலை காலத்தில் நடந்த போராட்டம், ஏ.எப்.டி.,மில் மூடுவதை தடுக்கும் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் என, கட்சியின் செயலாளர் லெனின்துரை தெரிவித்தார். இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட மண்டல கமிட்டிகளில் உறுப்பினராகவும் சங்கரன் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
அறிமுக கூட்டத்தில் தயாரிப்பு கமிட்டி உறுப்பினர் சிவக்குமார், சாமிக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

