தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


ADDED : நவ 27, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

சுற்றுச்சூழல் துறையின் பசுமை புதுச்சேரி இயக்கத்தில், பசுமை அரசு அலுவலகம் என்ற திட்டம் உள்ளது. புதுச்சேரியில் 46 அரசு துறை அலுவலகம், இதன் கிளை அலுவலகம் 500க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. பெரும்பான்மையான அலுவலகங்களில் சுற்றுச்சுவருடன் கூடிய காலி இடங்கள், புதர்கள் மண்டி உள்ளன.

இந்த இடங்களில் மரகன்றுகள் நட்டு பராமரிப்பதன் மூலம், பசுமையான அலுவலகமாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் துவக்க விழா தன்வந்திரி நகர் தீயணைப்பு துறையில் நடந்தது. துறை துணை அதிகாரி இளங்கோவன் தலமை தாங்கினார்.

புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் ஒருங்கினைப்பாளர், சுற்றுச்சூழல் துறையின் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், திட்ட அலுவலர்கள் சாந்தலட்சுமி, விமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தீயணைப்பு அலுவலகத்தை சுற்றி உள்ள காலி இடங்களில் மகுடம், அசோகா, பலா, கொய்யா போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us