ADDED : செப் 19, 2026 07:05 PM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் காரைக்கால் வளாகத்தில் சரோஜினி நாயுடு மகளிர் விடுதியின் திறப்பு விழா நடந்தது.
மகளிர் விடுதி காப்பாளர் மாலினி வரவேற்றார். துணைவேந்தர் பிரகாஷ் பாபு மகளிர் விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பல்கலைக் கழக காரைக்கால் வளாகத்தின் இயக்குனர் தரணிக்கரசு, பதிவாளர் குணசேகரன், நிதி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மாணவர் நலன் பிரிவு டீன் யெட்லா வெங்கட ராவ், பல்கலைக் கழக முதன்மை வளாக விடுதிகளின் தலைமை விடுதி காப்பாளர் சதீஷ் குமார், காரைக்கால் விடுதிகளின் தலைமை விடுதி காப்பாளர் பைரம் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், துணை வேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், மாணவர்களின் கல்வி மற்றும் தங்குமிடத் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதோடு, வளாகத்தை வலுப்படுத்தி கல்வியில் ஒரு சிறந்த மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தொலைநோக்குப் பார்வையையும், செயல் திட்டத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
சரோஜினி நாயுடு மாணவியர் விடுதி பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவது காரைக்கால் வளாகத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதோடு, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியரின் நலன், பாதுகாப்பு மற்றும் தங்கும் வசதிகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
