ADDED : ஆக 30, 2025 11:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓங்கார ஆசிரமத்தில், மயிலாடுதுறை சற்குரு ஓம்சித்தர் சுவாமிகளின் 62வது ஆண்டு மகா குரு பூஜை இன்று 31ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, காலை 6:00 மணிக்கு சற்குருவிற்கு நுண்மை அபிஷேகம், காலை 7:28 மணிக்கு மகர ஜோதி தரிசனம், சற்குரு ஆசி வழங்கல் நடக்கிறது. தொடர்ந்து, சற்குரு ஓம்சித்தர் சுவாமிகளின் அகண்ட நாமாவளி அர்ச்சனை, ஜெபம், பஜனை, தியானம், மகா மங்கள ஆரத்தி மற்றும் அன்னதானம் நடக்கிறது.மாலை 5:00 மணிக்கு சற்குரு ஓம் சித்தர் சுவாமிகளின் 'சற்குரு மகிமை'தலைப்பில் சிறப்பு அருளுரைகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு, ஓங்கார ஆசிரமம், ஓங்கார தலைமை பீட மகாதிபதி சுவாமி ஓங்காரநந்தா தலைமை தாங்குகிறார்.
ஓங்கார ஆசிரம அதிபர் சுவாமி கோடீஸ்வரானந்தா, யு.எஸ்.ஏ., சத்யநாராயணன், காஞ்சிபுரம் கருணாகரன், கடலுார் உலகேஸ்வரி, தங்கமுத்து ராம்குமார், சட்ட ஆலோசகர் நீதிக்குமார், பிரேமலதாதேவி ஆகியோர் சிறப்புஅருளுரைகள் வழங்குகின்றனர்.
