/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதா நவராத்திரியை முன்னிட்டு 3ம் தேதி சத சண்டி மகா ேஹாமம்
/
சாரதா நவராத்திரியை முன்னிட்டு 3ம் தேதி சத சண்டி மகா ேஹாமம்
சாரதா நவராத்திரியை முன்னிட்டு 3ம் தேதி சத சண்டி மகா ேஹாமம்
சாரதா நவராத்திரியை முன்னிட்டு 3ம் தேதி சத சண்டி மகா ேஹாமம்
ADDED : செப் 29, 2024 06:10 AM
புதுச்சேரி, : புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் சாரதா நவராத்திரியை முன்னிட்டு, லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் 5ம் ஆண்டு மகா சண்டி ேஹாமம் நடக்கிறது.
இந்த ஹோமம் வரும் 3ம் தேதி முதல் 12ம் தேதிவரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
காலை 7:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, விக்னேஸ்வர பூஜைகளுடன் துவங்கி வேதிகார்ச்சனை, சப்தசதி பாராயணம், சப்தசதி ஹோமம், மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
பின் தீபாராதனை முடிந்து மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
மாலை 5:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாமம், 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சதுர்வேத உபசாரம் நடைபெற்று இரவு 8:00 மணி முதல் 8:30 மணி வரை கலை நிகழ்ச்சி மற்றும் உபன்யாசம் நடைபெறும்.
சண்டி ஹோமத்தில் பங்கேற்று ஆதிபராசக்தியின் அருளை பெருமாறு, சமிதியின் தலைவர் சீதாராமன், செயலர் கணேசன் மற்றும் பொறுப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாகத்திற்கு பொருளுதவி, நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் 98945 75170, 98651 72323 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.