தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சத்யா ஏஜென்சீஸ் ரூ.600 கோடி ஐ.பி.ஓ., செபியிடம் விண்ணப்பம் தாக்கல்

சத்யா ஏஜென்சீஸ் ரூ.600 கோடி ஐ.பி.ஓ., செபியிடம் விண்ணப்பம் தாக்கல்

சத்யா ஏஜென்சீஸ் ரூ.600 கோடி ஐ.பி.ஓ., செபியிடம் விண்ணப்பம் தாக்கல்


ADDED : மார் 31, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 10:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சத்யா ஏஜென்சீஸ் லிமிடெட், ரூ.600 கோடி நிதி திரட்டும் நோக்கில் பங்குச் சந்தையில் தடம் பதிக்கிறது.

தென்னிந்தியாவின் முன்னணி நுகர்வோர் சாதனங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் சில்லறை விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்சீஸ் லிமிடெட், ரூ.600 கோடி நிதி திரட்டும் நோக்கில் பங்குச் சந்தையில் தடம் பதிக்கிறது. இதற்கான முதற்கட்டப் பங்கு வெளியீட்டு ஐ.பி.ஓ., வரைவு அறிக்கையை (டி.ஆர்.எச்.பி) இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் செபி நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

இந்த பொது வெளியீட்டில் ரூ.300 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடும் நிறுவனப் பங்குதாரர்களின் ரூ.300 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனையும் அடங்கும்.

​புதிய பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதியில், ரூ.175 கோடி கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், ரூ.35 கோடி 'யூனிலெட் அப்ளையன்சஸ்' நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் பயன்படுத்தப்படும். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 392 மின்னணு சாதன விற்பனை நிலையங்களையும், 35 பிரத்யேக மொபைல் விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் இயக்கி வருகிறது.

​கிரிசில் அறிக்கையின்படி, விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக சத்யா ஏஜென்சீஸ் உருவெடுத்துள்ளது. ​எல்.ஜி., சோனி, சாம்சங் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சர்வதேச பிராண்டுகளுடன் நேரடி வணிக உறவு கொண்டுள்ள இந்நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் லாப வளர்ச்சியில் சிறப்பான கூட்டு வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐ.பி.ஓ.,விற்கு ஆனந்த் ரதி மற்றும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனங்கள் முதன்மை மேலாளர்களாகச் செயல்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us